தாஜ்மகால் தூய்மை படுத்தும் பணியில் உ.பி., முதல்வர்
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் இன்று உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி தலைமையில் தூய்மை பிரச்சாரம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் தூய்மை ஏற்படுத்துவது முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தை துரிதப்படுத்தும் விதமாக உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தாஜ்மகால் வளாகம் சென்றார். அங்கு அவர் துடைப்பம் ஏந்தி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். இவருடன் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர், ஷா ஜகான் பார்க் பகுதியிலும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார்.