ராமர் கோவில் பூமிபூஜையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி: முன்னாள் உபி. முதல்வர் கல்யாண்சிங்
ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பதில், தான் மகிழ்ச்சி அடைவதாக உத்திர பிரதேச முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்து திரு, கல்யாண்சிங் அவர்கள், தான் ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள அவர் கஸ்ட் 4ம் தேதி அயோத்தி செல்ல உள்ளார்.
புதுடெல்லி (New Delhi): அயோத்தியின் பாபர் மசூதி ஆயிரக்கணக்கான கர சேவகர்களால் இடிக்கப்பட்ட 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மாநிலத்தின் முதல்வராக இருந்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், ராம் கோயிலின் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள அவர், இந்த விழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 4ம் தேதி அயோத்தி செல்ல உள்ளார்.
செய்தி நிறுவனமான ANI-இடம் பேசிய முன்னாள் முதல்வர், “ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். நானும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அங்கு வந்து மறுநாள் விழாவில் கலந்துகொள்வேன்” என்றார்.
"இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள ராம் கோயிலின் பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பரில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற பிரிவு பல நூற்றாண்டுகள் பழமையான அயோத்தி நில தகராறு குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
ALSO READ | Exclusive: ஸ்ரீராம் கோயில் பூமி பூஜை தொடர்பான வெளியான மற்றொரு பெரிய செய்தி
திரு. கல்யாண் சிங் ராஜஸ்தானின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.
பாபரி மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கல்யாண் சிங்கும் ஒருவர். அவர் தற்போது சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தனது தீர்ப்பை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
ALSO READ | ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண் எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற பாஜக தலைவர்களில், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் அடங்குவர்.