கும்ப மேளா மூலம் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் வாய்ப்பு...
உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் நடைப்பெற்று வரும் கும்ப மேளா திருவிழா மூலம் உபி அரசாங்கம், சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!
உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் நடைப்பெற்று வரும் கும்ப மேளா திருவிழா மூலம் உபி அரசாங்கம், சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!
உலக புகழ் பெற்ற கும்ப மேளா, உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் கடந்த ஜனவரி 15-ஆம் நாள் துவங்கி வரும் மார்ச் 4-ஆம் நாள் வரை வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக ₹4,200 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு கும்ப மேளாவிற்கு ஒதுக்கிய தொகையை காட்டிலும் இந்த தொகை ஆனது மும்மடங்கு அதிகமாகும்.
இந்நிலையில் தற்போது நடைப்பெற்றும் வரும் 2019-ஆம் ஆண்டு கும்பமேளா மூலம் உத்திரபிரதேச அரசாங்கத்திற்கு சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் ஆஸ்திரேலியா, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மொரிசியஸ், ஜிப்பாபேவே, இலங்கை உள்ளிட்ட 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும், இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெறிய தற்காலிக குடியிறுப்பு கிராமத்தை உத்திரபிரதேச அரசாங்கம் உருவாக்கியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது நடைப்பெறும் 2019-ஆம் ஆண்டு கும்பமேளா மூலம் உத்திரபிரதேச அரசாங்கத்திற்கு சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், ராஜஸ்தான் உத்திரகண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் இதனால் பயனடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.