உ.பி., அரசியலில் குழப்பம்!!
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு(முலாயம் சிங் யாத மகன்) இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் அமைச்சராக உள்ளார்.
அகிலேசுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவ்வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்வரின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால் அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கினார். அதோடு கட்சித் தலைவராக தனது சகோதரர் சிவ்பால் யாதவ்வை நியமனம் செய்து அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்துக்குள் சிவ்பால்லிடம் இருந்த பொதுப்பணித் துறை, நீர்ப் பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய பதவிகளை அகிலேஷ் பறித்தார். அதற்கு பதில் சமூக நலத்துறையை கொடுத்துள்ளார். அகிலேசின் இந்த அதிரடி நடவடிக்கை முலாயம்சிங், சிவ்பால் இருவருக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக சிவ்பாலுக்கு ஆதரவாக இருந்த உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை செயலாளர் தீபக் சிங்காலையும் அகிலேஷ் நீக்கினார்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் யாதவுக்கும் உடனடியாக டில்லி வருமாறு சம்மன் அனுப்பினார். இதனை ஏற்று சிவ்பால் டில்லி சென்றுள்ளார். ஆனால் தனது தந்தை சம்மனை அகிலேஷ் புறக்கணித்துள்ளார்.
உ.பி., மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது இச்சம்பவங்களால் சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.