கமலேஷ் திவாரி கொலையாளிகள் குறித்த தகவல்களுக்கு உ.பி. காவல்துறை ரூ .2.50 லட்சம் வெகுமதியை அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலைகாரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரையும் கைது செய்ய வழிவகுத்த தகவல்களுக்கு உத்தரபிரதேச காவல்துறை தலா ரூ .2.50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. திவாரியைக் கொன்ற இரு சந்தேக நபர்கள் ஷேக் அஷ்பக் உசேன் மற்றும் பதான் மொயுதீன் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


உத்தரப்பிரதேசத்தின் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினர். அக்குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.


ஷேக் அஷ்பக் உசேன் மற்றும் பதான் மொயுதீன் அகமது ஆகிய இரு சந்தேக நபர்களும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18, 2019) திவாரியை சந்தித்து அவருக்கு இனிப்புகள் பரிசளிக்கும் சாக்குப்போக்கில் அவரை கொலை செய்வதற்கு முன்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அவருடன் செலவிட்டனர். கம்லேஷ் திவாரி லக்னோவின் நாகா ஹிந்தோலா பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்குள் குத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சிகிச்சையின் போது லக்னோ மருத்துவமனையில் அவர் பலியானார். கொலையாளிகள் குற்றத்தைச் செய்த பின்னர் தப்பி ஓடிவிட்டனர், ஆனால் சி.சி.டி.வி கேமராவில் அவர்களின் காட்சிகள் உள்ளிட்ட முக்கிய தடயங்களை விட்டுச் சென்றனர்.


திவாரி கொலை குறித்து உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது, இதன் தொடர்புகள் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளில் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கமலேஷ் திவாரி இந்து மகாசபாவின் முன்னாள் தலைவராக இருந்தார். பின்னர் அவர் 2017 இல் இந்து சமாஜ் கட்சியை நிறுவினார்.