LOVE JIHAD எதிரான புதிய சட்டத்தின் கீழ் உ.பியில் பதிவான முதல் FIR..!!!
லவ் ஜிஹாத் எனப்படும் திருமணத்திற்காக கட்டாய மத மாற்றங்களைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது.
லவ் ஜிஹாத் எனப்படும் திருமணத்திற்காக கட்டாய மத மாற்றங்களைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது. மத மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் "லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை (Yogi Adityanath) கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு முஸ்லீம் ஆண், மதம் மாற வேண்டும் என ஒரு பெண்ணின் மீது அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டி, உத்தரப்பிரதேச (Uttar Pradesh) காவல்துறை தனது முதல் வழக்கை, மாநிலத்தின் புதிய மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு சனிக்கிழமையன்று பரேலி மாவட்டத்தில் உள்ள தியோரானியா காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது
குற்றம் சாட்டப்பட்டவர் தன் மகளை இஸ்லாமிற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்த முயன்றதாக இந்து பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | லவ் ஜிகாத்-க்கு எதிராக புதிய சட்டம் - பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
"அந்த இளைஞன் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளான். ஆகவே, அவன் மீது ஏற்கனவே மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞன் சிறுமியை மதம் மாற்றும்படி அழுத்தம் கொடுத்து வந்தார். லவ் ஜிஹாத்தை தடுப்பதற்கான புதிய மத மாற்ற சட்டத்தின் 3 மற்றும் 5 பிரிவுகளின் கீழ் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பரேலி கிராம காவல்துறை கண்காணிப்பாளர் சன்சார் சிங் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"இளைஞன் தப்பியோடி விட்டதாகவும், நாங்கள் அவனை கைது செய்ய தேடி வருகிறோம்" என்று திரு சிங் கூறினார்.
மேலும் படிக்க | கனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR