கனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

கனடாவிலிருந்து மீட்ட அன்ன பூரணி சிலை இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என பிரதமர் மோடி  தனது மன் கீ பாத் என்னும் மனதின் குரலில் தெரிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2020, 02:11 PM IST
  • கனடாவிலிருந்து மீட்ட அன்ன பூரணி சிலை இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தனது மன் கீ பாத் என்னும் மனதின் குரலில் தெரிவித்துள்ளார்.
  • இன்று நாட்டின் பல அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் தங்கள் சேகரித்துள்ள பொக்கிஷங்களை முழுமையாக டிஜிட்டல் ஆக்குவதில் ஈடுபட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
  • விவசாய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டன என்று பிரதமர் மோடி கூறினார்.
கனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி title=

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை வானொலியின் மான் கி பாத் நிகழ்ச்சியில்  நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடங்கி ஓராண்டு காலம் ஆகிவிட்டது. லாக்டவுன் கட்டத்தை தாண்டி இப்போது கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிக்கும் கட்டத்தில் இருக்கிறோம்.  நாம் அலட்சியமாக இருந்தால் கொரோனா மிக மிக ஆபத்தானதாக இருக்கும். ஆகையால் கொரோனாவுக்கு (Corona Virus)  எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி (PM Narendra Modi) தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மன் கீ பாத் (Mann Ki Baat) என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ' காசி அன்னபூரணி தேவியின் சிலை கனடாவிலிருந்து திரும்பி வருவதை அறிந்து ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைகின்றனர் என்றார். கனடாவில் இருந்து தாய் அன்னபூர்ணியின் சிலையை மீண்டும் கொண்டு வர உதவியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தாய் அன்னபூரணியின் இந்த சிலை 1913 இல் வாரணாசியில் இருந்து திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புனிதமான பணியை சாத்தியமாக்கிய கனடா அரசுக்கும், அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். காசி புகழ் அன்னை அன்னபூரணியின் சிலை, நம் நாட்டுக்கு திரும்புவது நம் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்க கூடிய உணர்ச்சி பூர்வமான விஷயம்.

நெருக்கடியான காலகட்டத்தில் கலாச்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நெருக்கடியை கையாள்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். கலாச்சாரம், தொழில்நுட்பத்தின் மூலமாகவும் நவீன முறையில் நம்முடன் இணைந்து, அது ஒரு உணர்ச்சிகரமான ரீசார்ஜ் ஆகவும் செயல்படுகிறது என்றார்.

ALSO READ | பிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

இன்று நாட்டின் பல அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் தங்கள் சேகரித்துள்ள பொக்கிஷங்களை முழுமையாக டிஜிட்டல் ஆக்குவதில் ஈடுபட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது நீங்கள் வீட்டிலிருந்து டெல்லியின் தேசிய அருங்காட்சியக காட்சியகங்களை பார்வையிட முடியும். டெல்லியில் உள்ள எங்கள் தேசிய அருங்காட்சியகம் இது தொடர்பாக சில பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

தொழில்நுட்பத்தின் (Technology) மூலம் கலாச்சார பாரம்பரியம்மேலும் மேலும் மக்கள் எளிதாக அணுகும் வகையில் இருப்பது முக்கியம் என்றாலும், இந்த பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பிற்கும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.

டெல்லி (Delhi) எல்லையில் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் புதிய விவசாய சட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி  இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். புதிய விவசாய சட்டம் விவசாயிகளுக்கு பலம் அளித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் (India) விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணங்கள் சேர்க்கப்படுகின்றன. விவசாய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டன. இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கப்படுகின்றன.  

பிரதமர் கூறுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் (Parliament) கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டங்கள் , விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது.

இந்த சட்டம் குறித்து மேலும் தெரிவித்த பிரதமர், இந்த சட்டத்தில் உள்ள விதிமுறையின் கீழ்  விவசாயியின் புகாரை ஒரு மாதத்திற்குள் தீர்க்க வேண்டும் என்றார்.

இந்த மாதம், டாக்டர் சலீம் அலி அவர்களின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நவம்பர் 12 முதல் தொடங்கியுள்ளன. பறவைகள் உலகில் Bird Watching தொடர்பாக உலகில் டாக்டர் சலீம் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார் என்றார்.

பிரதமர் அவரை பற்றி குறிப்பிடுகையில், அவர் பொறுமையுடன், காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பறவைகள் கண்காணிக்கவும், இயற்கையின் தனித்துவமான காட்சிகளை ரசிக்கவும் செலவிட்டதுடன், தான் அகண்டரிந்த விஷயங்களை அனைவருக்கும் கிடைக்க செய்தார் என்றார். இந்தியாவில் பல Bird Watching Society செயல்படுகின்றன என்றார்.

ALSO READ | இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!!
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News