பிரியங்கா காந்தி குற்றச்சாட்டுக்கு உபி காவல்துறை பதிலடி...
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டிற்கு உபி காவல்துறை பதில் அளித்துள்ளது!
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டிற்கு உபி காவல்துறை பதில் அளித்துள்ளது!
உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கொலை குற்றவாலிகள் கூட சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் என தனது பதிவில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டு இருந்தார். மேலும் குற்றவாலிகள் விரும்பியதை எல்லாம் செய்து வருகின்றனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆனால், அங்கு ஆட்சி செய்யும் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மாநில அரசின் செவிட்டு காதுகளில் இது விழவில்லை. கிரிமினல்களிடம் அம்மாநில அரசு சரணடைந்து விட்டதா?’ என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டிற்கு உத்திர பிரதேச காவல்துறை பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட குற்றவாலிகளை உத்திர பிரதேச காவல்துறை கடுமையாக தண்டித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 9225 குற்றவாலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 பில்லியல் சொத்துக்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்திருப்பதாகவும்" குறிப்பிட்டுள்ளது.