சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் , வன்முறையை தூண்டும் வகையிலான, தேச விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும்  இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. எனவே ட்விட்டர் நிறுவனம் சட்ட பாதுகாப்பை இழந்தது. 


அதாவது, இனி டிவிட்டரில் பதிவிடப்படும் போலி செய்திகள் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவற்றுக்கு ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டும்.  இது தொடர்பாக, பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே,  ட்விட்டர் மீதும் வழக்கு தொடரலாம். 


ALSO READ | Ghaziabad தாக்குதல் வழக்கில் ட்விட்டர் & பத்திரிகையாளர்கள் மீது FIR


 


இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் காசியாபாத்தில் ஒரு முஸ்லீம் மனிதர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் "வகுப்புவாத வன்முறையை தூண்டுவதற்காக"  பொய்யான தகவல்களை பரப்பி பதற்றம் ஏற்படுத்த முயன்றதாக, உத்தரபிரதேச காவல்துறை, ட்விட்டரின் (Twitter) இந்தியத் தலைவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தியாவில் ட்விட்டரின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி,  ஏழு நாட்களுக்குள்டெல்லிக்கு அருகிலுள்ள லோனி பார்டரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஆஜராகி,  தனது அறிக்கையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


"சிலர் தங்கள் ட்விட்டர் பதிவின் மூலம் சமூகத்தில் வெறுப்பை பரப்ப முயன்றனர். ட்விட்டர் கம்யூனிகேஷன் இந்தியா மற்றும் ட்விட்டர்  நிறுவனம் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சமூக விரோத செய்திகள் வைரலாக பரவுவதை அனுமதித்தனர்" என்று திரு மகேஸ்வரி அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வைரலான வீடியோவில் காணப்பட்ட, சூஃபி அப்துல் சமத்,  என்பவரது தாடி வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டதாகவும், அவரைத் தாக்கிய ஒரு குழு அவரை "வந்தே மாதரம்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், இது தாயத்து விற்பனை தொடர்பான பிரச்சனை எனவும், அவர் தாயத்துக்களை விற்கு ஏமாற்றியதாக, அவரிடம் இருந்து தாயத்து வாங்கிய இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகங்களை சேர்ந்த ஆறு நபர்கள் தாக்கியது தெரிய வந்தது.


இதை அடுத்து ட்விட்டர் மீதும்,  தவறான பதிவின் மூலம் இனவாத வன்முறையை தூண்ட முயன்ற, சுமார் 8 பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. கலவரத்தை தூண்டுதல்,  ஆத்திரமூட்டல், மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ALSO READ | Cyber Fraud: பணமோசடியை தடுக்க தேசிய ஹெல்ப்லைனை தொடக்கி வைத்தார் அமித் ஷா


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR