உ.பி.,யில் 51 தொகுதிகளுக்கு இன்று 5-ம் கட்ட தேர்தல்!!
உ.பி., சட்டசபையில் 5-வது கட்டமாக 51 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
லக்னோ: உ.பி., சட்டசபையில் 5-வது கட்டமாக 51 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இங்கு, பிப்ரவரி 11-ம் தேதி இருந்து, மார்ச் 8-ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
முன்னதாக உ.பி., யில் நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பல்ராம்பூர், கோண்டா, பைசாபாத், அம்பேத்கர் நகர், பாஸ்டி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு, 5-ம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆலாபுரில் உள்ள கனாஜியா தொகுதி சமாஜ்வாதி வேட்பாளர் திடீரென உயிரிழந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல், மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 608 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.