உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் அவர்கள் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கட்சியின் தலைமை தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-  அகிலேஷ் யாதவை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி கட்சியின் தலைமை தவறு செய்துவிட்டது, ஆனால் வேண்டு மென்றே கிடையாது. அவரை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கேட்டிருந்தால் அவரும் கொடுத்து இருப்பார். 


உ.பி., யில் தேர்தல் வர உள்ள நிலையில் தலைமை அகிலேஷ் யாதவ்வை முதல்-மந்திரி பதவியை நீங்கள் தொடருங்கள், சிவ்பாலை கட்சியின் தலைமை பொறுப்பை பார்த்துக் கொள்ளட்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கவேண்டும். அகிலேஷ் யாதவ் நீக்கமானது தவறான புரிதலுக்கு காரணமாகிவிட்டது. வேறு ஒன்றும் கிடையாது. சமாஜ்வாடி கட்சியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. என்று கூறியுள்ளார்.