உ.பி., பலாத்காரம் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 லட்சம் ஒரு வீடு அகிலேஷ் உத்தரவு
பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், தலா ஒரு வீடும் வழங்க உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சிறுமியும் அவரது தாயும் காரில் வந்து கொண்டிருக்கும் போது மர்ம கும்பல் அந்த காரை வழி மறித்து காரில் இருந்த தாய், அவரது 13 வயது மகள் ஆகியோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று 3 மணி நேரம் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் ஆகியவைகளை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டது.
கட்டிப் போடப்பட்டவர்களில் ஒருவர் கட்டுகளை அவிழ்த்து தப்பிவந்து, போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையை குற்றவாளிகளை 24 மணிநேரத்துக்குள் கைது செய்ய உத்தர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் 15 பேரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் குற்றவாளிகளில் மூன்றுபேரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில்:- இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவம் மிகவும் துர்ஷ்ட வசமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர் கட்சிகள் அரசியலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு முதல் மந்திரி நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், தலா ஒரு வீடும் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.