உ.பி., சட்டசபைக்கு நடந்த 3-ம் கட்ட தேர்தலில் 61% வாக்குப்பதிவு
உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3-வது கட்ட தேர்தலில் 61% ஓட்டுகள் பதிவானது.
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3-வது கட்ட தேர்தலில் 61% ஓட்டுகள் பதிவானது.
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 3-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளுக்கு தேர்தல் நேற்று நடந்தது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
69 தொகுதிகளிலும் 25,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 205 பெண் வேட்பாளர்கள் உள்பட 826 பேர் களத்தில் உள்ளனர்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோ நகரில் ஓட்டுபோட்டனர். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் எட்டவா நகரில் வாக்குப் பதிவு செய்தார். ஆங்காங்கே கட்சி தொண்டர்கள் இடையே நடந்த ஒரு சில மோதல்கள் தவிர மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்தபோது மொத்தம் 61% ஓட்டுகள் பதிவாகி இருந்தது.