சந்தைக்கு சென்ற கணவன்; தற்கொலை செய்து கொண்ட மனைவி... காரணம் என்ன?
கொரோனா முழுஅடைப்பால் நாடே முடங்கியிருக்கும் வேலையில்., சமீபத்தில் ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து வந்த வழக்கு தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா முழுஅடைப்பால் நாடே முடங்கியிருக்கும் வேலையில்., சமீபத்தில் ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து வந்த வழக்கு தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
நகரின் சங்காரியாவில் அமைந்துள்ள கணேஷ் நகரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா முழுஅடைப்பு சமையத்தில் அவரது கணவர் மதியம் சந்தைக்கு வெளியே சென்றதாகவும், அதே நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அவரது தற்கொலைக்கான காரணம் உறுதிப் படுத்தப்படவில்லை, இந்த சம்பவத்தில் பலியான பெண்மணிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், இந்த தற்கொலையால் குழந்தை தற்போது ஆதரவு இன்றி தவிப்பதாவகும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி பஸ்னி தனடிகாரி தேவேந்திர சிங், இந்த வழக்கு குறித்து மேலும் குறிப்பிடுகையில்., "திங்கள்கிழமை மாலை, கணேஷ் நகர் சங்காரியாவில் வசிக்கும் சோட்டு சோனியின் மனைவி, 22 வயதான கிரண் சோனி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
'கணவர் சோட்டு சோனி அதிகாலை 3:30 மணிக்கு சந்தைக்குச் சென்றிருந்தார், அதே சமையத்தில் கிரண் சோனி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த மக்கள் பதேபூர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள். பிழைப்பிற்காக ராஜஸ்தான் வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்களில் இருந்து கிடைத்த செய்தியின்படி, இந்த வழக்கில், தம்பதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர், மேலும் அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் குறித்து கண்டறியப்படவில்லை. தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.