முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையினை செலுத்தினார்.


இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பேரனான ராஜிவ் காந்தி அரசியலில் இருந்து விலகி, இத்தாலியில் தன்னுடன் பயின்ற சோனியா காந்தியை காதல் திருமணம் செய்து கரம் பிடித்தார். பின்னர் இந்தியாவில் தனது தாய் இந்திரா காந்திக்கு துணையாக இருந்த தனது சகோதரர் சஞ்சய் காந்தி 1980-ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமடைந்ததை அடுத்து அரசியில் காலெடுத்து வைத்தார் ராஜீவ் காந்தி.



1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை வேறு வழியின்றி ஏற்ற ராஜீவ் பின்னர் இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றம் கண்டது. கணினித்துவம் அதிகரித்தது, நவீன வளர்ச்சி கண்டது. 


பின்னர் 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மே 21-ஆம் நாள் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீ பெரம்பத்தூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவர் இந்தியா உள்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் நிகழ்து இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று ராஜீவ் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முன்னதாக தமிழகத்தில் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிவித்திருந்தார். மேலும் இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.