புதுடில்லி: விகாஸ் துபேவுக்கான (Vikas Dubey) மனித வேட்டையில் உ.பி (UP) காவல்துறையும் ஹரியானா (Haryana) போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. விகாஸ் தூபே குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கான சன்மானம் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் ஆனது. ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விகாசை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், விகாஸ் தூபே சரணடைய திட்டமிட்டுள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி. STF விகாசின் அனைத்து மறைவிடங்களிலும் சோதனைகளை நடத்தி வருகிறது. தூபே தற்போது தனியாக இருப்பதாகவும் அவன் விரைவில் தனது வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.


விகாசின் கிராமத்தை அடைந்த உ.பி. STF, அவன் வீட்டிற்குள் இருக்கும் கிணற்றிலும் தேடுதல் வேட்டையை நடத்தியது. 


மேலும், தனது கைதுக்கு 25,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த, விகாஸ் தூபேயின் உதவியாளர் ஷியாமு பாஜ்பாய், சௌபேபூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான். 


உத்தரப்பிரதேச காவல்துறையின் 100 க்கும் மேற்பட்ட அணிகள் நாபாண்டில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் ஐந்து நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி விகாஸ் தூபேவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விகாசின் தலைமையின் நடந்த தாக்குதலில் எட்டு பொலிசார் கொல்லப்பட்டனர்.


ஹமிர்பூரில் நடந்த என்கௌண்டரில் (Encounter) உத்தரபிரதேச போலீசார் புதன்கிழமை விகாஸ் தூபேயின் நெருங்கிய உதவியாளரான அமர் தூபேவைக் (Amar Dubey) கொன்றனர். இந்த நடவடிக்கையை உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழு மேற்கொண்டது.


ALSO READ: Kanpur Encounter: விகாஸ் தூபேவின் கூட்டாளி அமர் தூபே சுட்டுக்கொல்லப்பட்டான்.


இதற்கிடையில், ஹரியானா போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தி விகாஸ் துபேயின் மூன்று உதவியாளர்களை கைது செய்தனர்.


ஜூலை 3 ம் தேதி, டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உட்பட எட்டு போலீசார் கான்பூருக்கு அருகிலுள்ள பிக்ரு கிராமத்தில் துபே மற்றும் அவனது குழுவை கைது செய்ய சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு சிவிலியன் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.