உரி தாக்குதல்: பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை
ஜம்மு காஷ்மீரின் உள்ள உரி ராணுவ முகாமிற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், உரி தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.