உரி தாக்குதல்: உயர் மட்ட குழுவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
சர்வதேச அளவில் இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உயர் மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.