பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர் ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உரி ராணுவ முகாம் மற்றும் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை  உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடு பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன.


இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுக்கையில் கூறியதாவது:- எந்த நாடும் எங்கள் மீது போரை திணித்தால் அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். தேவைப்பட்டால் அணுகுண்டை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்ர்.


காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இது போல் ராஜஸ்தான் ஜெய்சல்மர் பகுதியில் இருந்து 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்தில்  சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் தனது படைகளை குவித்து வருகிறது. மேலும் அப்பகுதியில் ராணுவ வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.


இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை கூட்டினார். இதில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு மற்றும் எல்லைப் பகுதி நிலவரம் குறித்தும் தகுந்த பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று இரவு பயயங்கரவாதிகள் முகாம்களின் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் எனபது இப்போதைக்கு முழு விவரங்களை தெரிவிக்க முடியாது. எந்த தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என இந்திய தரப்பில் கூறப்பட்டது.