உரி தாக்குதல்: என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்தது

ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் ஒரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரு ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் உரி தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பதற்காக காஷ்மீர் விரைந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் ரத்த மாதிரிகள், கைரேகை பதிவுகள் போன்றவையும் சேகரிக்கப்படும் என தெரிகிறது. ஆறு பேர் கொண்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவித்தன.