இந்திய கோவிலில் பக்தர்களுக்கு ரொட்டி சுட்டுக்கொடுத்து அசத்திய அமெரிக்கத் தூதர் ஹாலே!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்பது குருத்வாரங்களில் சிஸ் காஞ் சாஹிப் (sis ganj sahib) குருத்வாரம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த குருத்வாரத்திற்கு சென்ற ஐ.நா-விற்கான நிரந்தர அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, பக்தர்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். 



இதையடுத்து அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரொட்டி சுட்டும், உணவு சமைத்தும் அசத்தினார். முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த இவர், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியிருந்தார். இவர் சமைக்கும் வீடியோவானது இணையத்தில் வைராலக பரவிவருகிறது.  



அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஹாலேவின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது!