அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதி சபை எம்.பி.க்களான குடியரசு கட்சி உறுப்பினர் மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆகியோர் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மசோதாவில் பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உகந்த நாடாக இல்லை என்றும், அமெரிக்காவின் எதிரிகளை பல ஆண்டுகளாக தூண்டிவிட்டும் வருகிறது. தீவிரவாதம் தொடர்பான பாராமுக நடவடிக்கைகளுக்காக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடான பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை நாம் நிறுத்திக் கொண்டு, அந்நாட்டை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும்.


ஹக்கானி தீவிரவாத குழுக்களை ஆதரிப்பது, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கம் இல்லை என்பதுடன், அந்நாடு யாருக்கு ஆதரவாக உள்ளது? என்பதை நிரூபிக்க நம்மிடம் தேவைக்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.


சர்வதேச தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகிறதா? இல்லையா? என இன்னும் 90 நாட்களுக்குள் அதிபர் பராக் ஒபாமா அறிக்கை வெளியிட வேண்டும். அதைத்தொடர்ந்து, அடுத்த 30 நாட்களுக்குள் பாகிஸ்தான் தீவிரவாத நாடுதான் என்றோ, அல்லது, அந்த வரையறைக்குள் பாகிஸ்தானை நிறுத்த போதுமான காரணங்கள் இல்லை என்றோ அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி விரிவான மற்றொரு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.