US மக்கள் காஷ்மீர் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்க அரசு
காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது!!
காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது!!
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி, கொடுத்தது. இதை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரையும், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் சுற்றுலா தளங்கள், போக்குவரத்து முனையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்கள் செல்லும் வாகனங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.