14:31 24-02-2020
பாகிஸ்தானுடனான எங்கள் உறவு மிகவும் நல்லது. பாகிஸ்தான் பெரிய முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காணத் தொடங்கியுள்ளோம். அவர்களின் இந்த முயற்சிகளுக்கு நன்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

14:24 24-02-2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: நாளை நமது பிரதிநிதிகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். #NamasteTrump



14:16 24-02-2020
அமெரிக்க ஜனாதிபதி: நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும்போது, இந்த உலகில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுவரை மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். நாங்கள் சிறந்ததைச் செய்கிறோம், அதை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்கிறோம் #NamasteTrump



14:10 24-02-2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: பாலிவுட் படங்கள், பங்க்ரா மற்றும் டி.டி.எல்.ஜே (DDLJ) மற்றும் ஷோலே போன்ற கிளாசிக் படங்களைப் பார்ப்பதில் உலகமெங்கும் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள்.



14:07 24-02-2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: பிரதமர் மோடி நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பாளி மற்றும் பக்திமான். இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் வாழ்கிறீர்கள். நம்பமுடியாத வகையில் பிரதமரின் எழுச்சி உள்ளது.



14:03 24-02-2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: இந்த குறிப்பிடத்தக்க விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். எங்கள் இதயத்தில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது. பிரதமர் மோடி "டீ வாலா" ஆக வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் தேநீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி.


 




13:58 24-02-2020
நமஸ்தே டிரம்ப் நிகழ்சியில் பேசும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்.


 




12:33 24-02-2020
சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்க்கும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி. இருவருக்கும் பிரதமர் மோடி விளக்கம் அளித்து வருகிறார்.


 



 



12:23 24-02-2020
இந்திய மண்ணில் கால்பதித்த அதிபர் டொனால்ட் டிரம்ப். விமான நிலையத்தில் இருந்து நேராக சபர்மதி ஆசிரம் வந்தடைந்தார்.


 



 




12:19 24-02-2020
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரை அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்சியில் கலந்துக்கொள்ள வாகனம் மூலம் சாலையில் செல்கின்றனர். இருபக்கமும் மக்கள் வரிசையாக நின்று, அவர்களுக்கு வரவேற்று வருகின்றனர்.


 




11:59 24-02-2020
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கட்டிப்பிடித்து வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.


 



 



 



11:37 24-02-2020
தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.


 




11:34 24-02-2020
"நமஸ்தே டிரம்ப்" ஆயிரக்கணக்கான மக்கள்.... பறக்கும் கொடிகள்... உற்சாக நடனம்...



11:33 24-02-2020
டொனால்ட் டிரம்ப்புடன் இந்தியாவுக்கு வரும், அவரது மகள் இவான்கா அமெரிக்க ஜனாதிபதியின் "கிரீடம்" அணிந்திருந்தார்.



புது டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள், மருமகளுடன் இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் தரை இறங்க உள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை பிரதமர் மோடியுடன் 22 கி.மீ நீளமுள்ள ரோட்ஷோவில் டிரம்ப் கலந்துக்கொல்வார். பின்னர் அவர் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் மோடியுடன் இணைந்து மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இதன் பின்னர் அவர் தாஜ்மஹால் பார்க்க ஆக்ரா செல்வார். டொனால்ட் டிரம்பின் சுற்றுப்பயணம் தொடர்பான ஒவ்வொரு புதுப்பிப்புக்கும் எங்களுடன் இருங்கள்...