Joe Biden India Visit: இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் டெல்லி சென்றடைந்தார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பிடன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். ஜோ பிடனுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோ பிடனை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். இதையடுத்து ஜோ பிடன் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி-பிடென் சந்திப்பு: சில முக்கிய அம்சங்கள்


பிரதமர் மோடி மற்றும் ஜோ பிடன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படலாம். பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, ராணுவ ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தகம், வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி துறை, காலநிலை மாற்றம், விண்வெளி ஒத்துழைப்பு, சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கல்வி, கலாச்சார ஒத்துழைப்பு, இந்தோ - பசிபிக், சர்வதேச விவகாரங்கள், இருதரப்பு உறவுகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.


QUAD விரிவாக்கம் குறித்து பேசப்படும்


இந்தோ-பசிபிக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் பேசலாம். இது தவிர, குவாட் (QUAD) விரிவாக்கத்தில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கலாம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மை குறித்து விவாதிக்கலாம். அணுசக்தி, உயர் தொழில்நுட்பம், விண்வெளி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேசப்படும். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான விசா குறித்து பேசலாம். சீனாவின் விஸ்தரிப்புவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கலாம்.


மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!


G-20 உச்சிமாநாடு


செப்.9 மற்றும் 10 ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 2023 G20 உச்சிமாநாடு, பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இது G20 உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20  உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது.


விருந்தினர்களை வரவேற்க அலங்கரிக்கப்பட்டுள்ள டெல்லி 


ஜி-20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முழு நிகழ்ச்சியும் இந்தியாவின் தலைமையில் நடைபெறுகிறது. விருந்தினர்களை வரவேற்க டெல்லி அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சிமாநாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களை வரவேற்க டெல்லி தயாராக உள்ளது .. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட உச்சி மாநாடு நடைபெறும்.


மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ