ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தவிர, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முறை G-20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் வசுதைவ குடும்பகம்: ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம்.
G20 உச்சிமாநாட்டின் முழு நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும்
பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாடு (G-20 Summit) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் 8ஆம் தேதி மாலை இந்தியா வருகிறார். அவர் வியாழக்கிழமை அமெரிக்காவிலிருந்து புறப்படுகிறார். செப்டம்பர் 8ஆம் தேதி மாலை பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது.
உச்சிமாநாட்டின் முதல் நாளான செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஜி20 தலைவர்களை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக வரவேற்கிறார். முதல் அமர்வு காலை 10 அல்லது 10:30 மணிக்குத் தொடங்கும், இது மதிய உணவு வரை தொடரும். இந்த அமர்வின் பெயர் ஒரு பூமி. இரண்டாவது அமர்வு மதிய உணவுக்குப் பிறகு இருக்கும், இது ஒரு குடும்பம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமர்வு மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். முதல் நாள் சனிக்கிழமை பாரத் மண்டபத்தின் பல்நோக்கு மண்டபத்தில் G20 தலைவர்களின் இரவு உணவு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியுடன் முடிவடையும். இந்த விருந்து இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!
செப்டம்பர் 9 ஆம் தேதி, ஜி 20 தலைவர்களின் மனைவிகள் பூசாவின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அதில் அவர்கள் இந்தியாவின் சிறுதானியங்களில் செய்யப்பட்ட பணிகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். இவர்களுக்கு பல்வேறு தினைகள் சாகுபடி செய்து காட்டப்படும். இதற்குப் பிறகு, ஜி20 தலைவர்களின் மனைவிகள் தேசிய நவீன கலைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு இந்திய கலை காட்சிப்படுத்தப்படும்.
ஜி20 உச்சி மாநாடு ராஜ்காட்டிலும் நடக்கிறது
மாநாட்டின் இரண்டாவது நாளில், அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி, G20 தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் ராஜ்காட் வருகை தருவார்கள். இதைத்தொடர்ந்து இந்த தலைவர்கள் அனைவரும் பாரத மண்டபத்தில் மரக்கன்றுகளை நடுவார்கள். இரண்டாவது நாளில் மூன்றாவது அமர்வு நடைபெறும். இந்த அமர்வின் பெயர் ஒரே எதிர்காலம் என்ற அமர்வு. இரண்டு நாட்களில் மொத்தம் மூன்று அமர்வுகள் இருக்கும். செப்டம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி செப்டம்பர் 10-ம் தேதி பிரேசில் அதிபர் லூலாவிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைக்கிறார்.
G20 இன் உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. G20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU ) சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்... எதிர்கட்சியினர் கண்டனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ