அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் ஒரு ஊரடங்கு...
உத்தரபிரதேச அரசு வியாழக்கிழமை மாநிலத்தில் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
உத்தரபிரதேச அரசு வியாழக்கிழமை மாநிலத்தில் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் படி இன்று(ஜூலை 10) இரவு 10 மணி முதல் ஜூலை 13-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். இந்த 55 மணிநேர ஊரடங்கு அறிவிப்பு மாநிலத்தில் சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளின் பின்னணியில் வந்துள்ளது.
READ | கான்பூர் என்கவுண்டர்: சபேபூர் காவல் நிலையத்தில் இருந்த 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
ஊரடங்கு விதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காலகத்தில், அனைத்து அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்படும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும். ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அரசாங்கம் தனது அறிவிப்பில். மருத்துவ மற்றும் அவசர சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் போது சரக்கு வாகனங்களின் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்காது.
அறிவிக்கப்பட்ட காலத்தில் முழு அடைப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்க மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை ரோந்துப் பணிகள் செயலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் இதுவரை மொத்தம் 31,156 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 20,331 நோயாளிகள் குணமாகியுள்ளனர் / மீட்கப்பட்டுள்ளனர். எனினும், 845 பேர் கொடிய தொற்று நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அரசு தரப்பு தகவல்கள் படி தற்போது மாநிலத்தில் 9,980 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் கூடாது இருக்கும் விதமாக, 55 மணி நேர ஊரடங்கினை விதிக்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
READ | வெந்தய கீரை என நினைத்து கஞ்சாவை சாப்பிட்ட முழு குடும்பம்....அதிர்ச்சி சம்பவம்...
முன்னதாக, கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க அசாம் அரசு வியாழக்கிழமை மாலை முதல் எட்டு நாட்களுக்கு கோலாகாட் நகரில் "முழு ஊரடங்கு" விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.