இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதால் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த அறையில் இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்த மருத்துவரால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தில் உள்ளது ஷாம்லி மாவட்டம். இங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை பிறந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தாலும், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஒளிக்கதிர் சிகிச்சைக்காக இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | சிகப்பாக குழந்தை பிறந்ததால் மனைவி சித்திரவதை செய்யப்பட்டு கொலை


இந்த நிலையில், அன்று இரவு அந்த மருத்துவமனையில் உரிமையாளரான மருத்துவர் நீத்து குழந்தைகள் சிகிச்சை பெற்ற அறையில் தூங்கியுள்ளார். அவர் ஏசியில் அதிக குளிர்ச்சியை வைத்துவிட்டு இரவு முழுவதும் நன்றாக தூங்கியுள்ளார். அடுத்த நாள் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காண அவர்களது உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். இதனால் உறவினர்கள் மருத்துவர நீத்துவை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அதன்பிறகு அவர்கள் கொடுத்த புகார்கள் மருத்துவர் நீத்து மீது சட்டப்பிரிவு 304-ன் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். உத்தர பிரேத மருத்துவத்துறை சார்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள் மருத்துவரின் அலட்சியத்தல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கடன் பிரச்னையில் 3 வயது குழந்தை கொடூர கொலை; 2 பேர் கைது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ