கொரோனாவை தடுக்க அடுத்த முயற்சி; 15 மாவட்டங்கள் முழுமையாக அடைப்பு...
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாநிலத்தின் 15 மாவட்டங்கள் (கொரோனா தொற்றின் ஹாட்ஸ்பாட்கள்) முற்றிலுமாக மூடப்படும் என்று உத்தரபிரதேச அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாநிலத்தின் 15 மாவட்டங்கள் (கொரோனா தொற்றின் ஹாட்ஸ்பாட்கள்) முற்றிலுமாக மூடப்படும் என்று உத்தரபிரதேச அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
இந்த மாவட்டங்களில் அதிக வைரஸ் தொற்று காணப்படுவதால், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று உத்தரபிரதேசத்தின் தலைமைச் செயலாளர் RK திவாரி தெரிவித்துள்ளார். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பகுதிகள் உட்பட இந்த 15 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இடங்களில் வீட்டு விநியோக மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். குறைந்தது ஏப்ரல் 13-வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், மறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தை பொறுத்தவரையில்., கொரோனா வைரஸ் நோயால் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர் மற்றும் 21 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா ஏற்கனவே மூன்று வாரங்கள் நாடு தழுவிய முழுஅடைப்பின் கீழ் உள்ளது, மார்ச் 25 அன்று தொடங்கிய இந்த முழு அடைப்பு வரும் ஏப்ரல் 14 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது மாநிலத்தின் 15 மாவட்டங்கள் முற்றிலுமாக மூடப்படும் என்று உத்தரபிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 மாவட்டங்களின் பட்டியல் இங்கே:
ஆக்ரா
காசியாபாத்
கொதம புத்த நகர்
பஸ்தி
கான்பூர்
வாரணாசி
லக்னோ
ஷாம்லி
புலந்த்ஷாஹர்
சீதாபூர்
மகாராஜ்கஞ்ச்
மீரட்
பரேலி
பிரோசாபாத்
சஹரன்பூர்