முன்னாள் மத்திய அமைச்சர் MJ அக்பரை தொடர்ந்து மற்றொரு பாஜக பிரமுகர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்ரகாண்ட் மாநில பாஜக பொது செயலாளர் சஞ்சய் குமார் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, மாநில பொது செயலாளர் பதவியில் இருந்து சஞ்சய் குமார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சஞ்சய் குமார் மீதான இந்த அதிரடி நடவடிக்கை கட்சி தலைமையில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் மீது சொந்த கட்சி உறுப்பினரே புகார் அளித்த நிலையில் கட்சியின் பெயருக்கு கலங்கம் வந்துவிடும் என பாஜக தலைமை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.



குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் குமார் மீது புகார் எழுந்ததை அடுத்து உத்ரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கழகத்தின் மாநில உறுப்பினர்களுடன் கட்சி தலைமை அவசர கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவினை அடுத்து சஞ்சய் குமார் அவர்களுக்கு கட்சியின் தலைமையகத்தில் இருந்து புதுடெல்லிக்கு வருமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


சஞ்சய் குமார் டெல்லி வந்தடைந்த பின்னரே அவரது பதவி நீக்கம் குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் உத்ரகாண்ட் மாநிலத்திற்கு பாஜக கட்சியின் புதிய பொது செயலாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.