மலைப்பாதையில் கார் விபத்துக்கு 9 பேர் பலியான சோகம்! மீட்புப்பணிகள் தொடர்கின்றன
உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வரின் ஷாமாவிலிருந்து பித்தோராகரின் நச்சானிக்கு சென்றுக் கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது
பித்தோர்கர்: உத்தரகாண்ட் மாநிலம்பித்தோர்கரில் பேருந்து ஒன்று சுமார் 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயமடைந்துள்ளனர். போலீசார் மற்றும் SDRF குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மலைப் பிரதேசமான பித்தோராகரில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தில் கார் ஒன்று விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 9 பேர் இறந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்ததாகவும் குமாவோன் ஐஜி நிலேஷ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..
விபத்து குறித்து முதல்வர் தாமி இரங்கல்
பித்தோராகர் விபத்து குறித்து, முதல்வர் தாமி ட்வீட் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகேஷ்வரின் ஷாமாவிலிருந்து பித்தோராகரின் நச்சானி நோக்கி வந்த வாகனம், எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தது குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. மீட்புக் குழுவினர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஒடிஷா ரயில் விபத்து... ‘காணாமல் போன’ ஜூனியர் இன்ஜினியர் வீட்டுக்கு சீல் வைத்த CBI
500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் விழுந்தது
பயணிகள் நிரம்பிய பொலிரோ கார் விபத்துக்குள்ளாகி 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் பாகேஷ்வரில் இருந்து போலீஸ்-எஸ்டிஆர்எஃப் குழுவினர் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர். விபத்து நடைபெற்றபோது காரில் 12 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள்
பாகேஷ்வர், கப்கோட் முன்னாள் எம்எல்ஏ மற்றும் ஷாமா கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பகேஷ்வரின் பனார் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 5 வாகனங்களுடன் ஹோக்ரா தேவி கோவில் முன்சியாரிக்கு புறப்பட்டனர். இதில் ஒரு கார் நொறுங்கியது. செங்குத்தான இடம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, இதுவரை 5 உடல்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ