பித்தோராகர்: நமது நாட்டின் பாதுகாப்புக்காக பணிபுரியும் வீரர்கள் நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை தங்கள் தலையாய கடமையாக எண்ணி செய்கிறார்கள். உடலாலும் மனதாலும் அயராத அந்த வீரர்கள் சில சமயம் செய்யும் தனித்துவம் வாய்ந்த செயல்கள் நம் மனங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனதை உருக்கும் ஒரு நிகழ்வில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) வீரர்கள் சமீபத்தில் ஒரு செயலை செய்துள்ளனர். இறந்த ஒருவருடைய உடலை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க, இந்த வீரர்கள், சியுனி கிராமத்தில்கிருந்து அந்த நபரின் முன்ஸ்யாரி கிராமத்தை அடைய, சுமார் 8 மணி நேரம் உடலை சுமந்து கொண்டு 25 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளனர். உத்திராகண்டின் பித்தோராகர் (Pitoragarh) மாவட்டத்தின் தொலைதூர பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு சென்று, ITBP வீரர்கள் இறந்த நபரின் உடலை அவர் குடும்பத்திடம் ஒப்படைந்த்தனர். ஷூடிங் ஸ்டோன்ஸ் எனப்படும் கற்களால் அடிபட்டு அந்த நபர் இறந்துவிட்டார்.


ALSO READ: லடாக்கில் பாங்காங் திசோ ஏரியை இந்திய படை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது எப்படி..!!!


தகவல்களின் படி, உத்திராகண்டின் (Uttarakhand) பித்தோராகர் மாவட்டத்தின் முன்னோக்கி பதவியான பாக்தயார் அருகே சியுனி கிராமத்தின் எல்லைப்புற கிராமத்தில் 30 வயது உள்ளூர் இளைஞர் மரணம் குறித்து ITBP 14 வது படைக்கு தகவல் கிடைத்தது.


ஆகஸ்ட் 30 ம் தேதி இந்த தகவல் கிடைத்தவுடன், ITBP வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து உடலைப் பாதுகாத்தனர். இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை மூடப்பட்டிருந்தது.


நிலைமையை உணர்ந்த ITBP வீரர்கள், உள்ளூர்வாசிகளின் உதவியுடன், உடலை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து, சுனியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள முன்சியாரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.



முன்சியாரிக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமானதாகவும், கற்கள் மற்றும் கற்பாறைகள் நிறைந்ததாகவும் இருந்தபோதிலும், ITBP குழு எல்லா வழிகளிலும் மிகவும் கவனமாக நகர்ந்தது.


இறந்த உடலை மீண்டும் கொண்டு வந்து குடும்பத்திடம் ஒப்படைப்பதற்கான அவர்களின் பணி ஆகஸ்ட் 30 மதியம் தொடங்கி, சுமார் எட்டு மணி நேரம் கழித்து, அதே நாளில் மாலை ஏழு-முப்பது மணிக்கு முடிந்தது. மொத்தம் 8 வீரர்கள் உடலை மாறி மாறி தூக்கி வந்தனர். சுனியில் இருந்து சுமார் 25 கி.மீ தூரம் நடந்து, முதலில் சீரான பாதையை அடிந்து பின்னர் இறந்தவரின் உறவினர்களிட்ம உடலை ஒப்படைத்தனர்.


இதன் பின்னர், இறந்தவரின் இறுதி சடங்குகள் இறந்தவரின் கிராமமான பங்கபனியில் செய்யப்பட்டன.


ALSO READ: வாடகை செலுத்த அழுத்தம் கொடுத்த அறை தோழர்களை கொலை செய்த ஆண்!!