உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி சாதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மனிதன் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலம் ஹால்டுனி பகுதியை சேர்ந்தவர் உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் சந்திர உபாத்யா. அவர் சுமார் 5 மிமீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட மரத்தாலான பென்சிலை உருவாக்கியுள்ளார்.
ANI - தகவலின் படி, இந்த பென்சிலானது "பென்சில் ஒரு மரத்தால் ஆனது என்றும் சுமார் 5 மிமீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் உடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உபாத்யா இந்த பென்சிலை செய்ய மூன்று அல்லது நான்கு நாட்களை எடுத்தது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் உபாத்யா ஹனுமான் சலிஸாவை 3x3x4 மில்லி அளவு மற்றும் ஒரு மினியேச்சர் சர்க்காவை உருவாக்கியுள்ளார். அவரது அசாதாரண திறமை காரணமாக்கு வருக்கு AWRRF-ஆனது அசிஸ்ட் உலக சாதனைகள் பட்டம் வழங்கியுள்ளது.