இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் உத்தரகண்ட் - டெல்லி நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, சாலை டிவைடரில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் ஓட்டிய  ரிஷப் பண்ட் மது போதையில் இருந்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, ரிஷப் பண்ட் அதிவேகமாக சென்றார் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஹரிதுவார் காவல்துறை விளக்கமளித்துள்ளது. 


அவர் கார் ஓட்டும்போது, குடிக்கவோ அல்லது காரை வேகமாகவோ இயக்கவில்லை என ஆதாரத்துடன் கூறியுள்ளது.  இதுகுறித்து, ஹரிதுவார் மூத்த காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறியதாவது,"உத்தர பிரதேசத்தின் எல்லையில் இருந்து விபத்து நடந்த பகுதி வரை உள்ள 8 முதல் 10 வேகத்தை கண்காணிக்கும் கேமராகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் ரிஷப் பந்த் அதிவேகத்தில் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 


மேலும் படிக்க | 'அவரு யாருனே எனக்கு தெரியாது' - ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சொன்னது என்ன?


அவர் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவான, மணிக்கு 80 கி.மீ., வேகத்திலேயே பயணித்தார். அவர் அதை தாண்டி செல்லவில்லை. சிசிடிவி காட்சியில் கார் அதிவேகமாக வந்ததுபோல் இருந்தாலும், அவர் கார் டிவைடரில் மோதியவுடன் அந்தரத்தில் பறந்தது. எனவே, அதிவேகமாக வந்தது  போன்று தோன்றியது. விபத்து நடந்த இடத்தை வல்லுநர் குழு முழுமையாக ஆய்வு செய்தனர். அவர் காரை அதிவேகமாக இயக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 


அதுமட்டுமின்றி, அவர் கார் ஓட்டும்போது மது அருந்தியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் மது அருந்தியிருந்தால், எப்படி 200 கி.மீ காரை ஓட்டி வந்திருக்க முடியும். விபத்தில் இருந்து மீட்டு முதலில் அவரை அனுமதித்த ரூர்க்கி மருத்துவமனையும், அவர் மது அருந்திருக்கவில்லை என அறிக்கை அளித்துள்ளது. மது போதையில் இல்லாதனால்தான் அவரால் தன்னிலையுடன் கண்ணாடியை உடைத்து வெளிவர முடிந்தது. போதையில் இருந்தால் அப்படி செய்திருக்க முடியாது" என்றனர். 


ரிஷப் பண்ட், அதிவேகமாக செல்வதை பழக்கமாக வைத்திருந்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன் தான் அதிவேகமாக கார் ஓட்டுவதாக ஷிகர் தவாணிடம் ரிஷப் பண்ட் கூறிய உரையாடல் ஒன்று வைரலாகி வந்தது. 6 மாதக்காலம் ரிஷப் பண்டால் கிரிக்கெட் விளையாட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரிஷப் பந்த் இனி கிரிக்கெட் விளையாட முடியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ