Rishabh Pant Replacement : ரிஷப் பண்டுக்கு பின்... வாய்ப்புக்கு கழுகாக காத்திருக்கும் இந்த 3 இந்திய வீரர்கள்!

Rishabh Pant Replacement : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவருக்கு பதில்  வேறு யாருக்கு அணியில் வாய்ப்பளிக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2022, 01:29 PM IST
  • டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டை இந்தியா மிகவும் நம்பியிருந்தது.
  • விரைவில் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
  • இனி ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாட இயலுமா என்ற துயர கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Rishabh Pant Replacement : ரிஷப் பண்டுக்கு பின்... வாய்ப்புக்கு கழுகாக காத்திருக்கும் இந்த 3 இந்திய வீரர்கள்!  title=

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது உத்தரகண்ட் தலைநகர் ரேடாடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகத்தில் சில வெட்டு காயங்களும், வலது கால் முட்டியில் தசைநார் கிழந்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி,  அவரின் வலது கால் மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர் எப்போதும் மீண்டும் கிரிக்கெட் வீளையாடுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக, அவரால் மீண்டும் கிரிக்கெட் விளையாட இயலுமா என்ற அச்சமும் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. 

ரிஷப் பண்ட் ஒருநாள், டி20 போட்டிகளில் சற்று சுணக்கம் காட்டினாலும், டெஸ்ட் போட்டியில் காட்டாற்று வெள்ளமாக ரன்களை குவித்து வந்தார். இந்தாண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிக ரன்களை எடுத்தவர் ரிஷப் பண்ட்தான். ஆனால், முன்னர் சொன்னது போல் டி20, ஒருநாள் அரங்கில் இந்த நிலைமையே தலைகீழாகதான் உள்ளது. இருப்பினும் அவரின் அதிரடி மற்றும் அச்சமில்லா ஆட்டத்திறன் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 

25 வயதான அவர் துணை கேப்டன் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், இந்தியாவின் வருங்கால உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனால், அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது என்பது சற்று கடினம்தான். 

மேலும் படிக்க | ரிஷப் பந்த் இனி கிரிக்கெட் விளையாட முடியுமா?

இஷான் கிஷன்

ஏற்கெனவே இந்திய அணியில் விக்கெட் கீப்பர்  பேட்டர்கள் அதிகமாக இருப்பதனால், அனைவரையும் உள்ளடக்கி விளையாட இந்திய அணி திணறி வந்தது. ஒருநாள் போட்டிகளில் பினிஷர் ரோலுக்கு சூர்யகுமார் யாதவ் இருப்பதால், ரிஷப் பண்டை 2023ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் கழட்டி விடவே பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. 

ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பளித்தால், விக்கெட் கீப்பிங் ஆப்ஷனும் சரியாகும், இடதுகை அதிரடி பேட்டிங் ஆப்ஷனும் சரியாகும். தற்போது, வங்கதேசத்திற்கு எதிராக 200 ரன்களை அடித்து அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டாலும், இனி ரிஷப் பண்டா அல்லது இஷானா என்ற கேள்வி வரவே வராது. எனவே, ஒருநாள் தொடரில் இஷான் கிஷன்தான் காயமடைந்த பண்டிற்கான மாற்றாகப் பார்க்கப்படுகிறார். 

சஞ்சு சாம்சன் 

ஒருநாள் போட்டி ஓக்கே ஆனால், டி20 போட்டிக்கு என உங்களின் கேள்வி புரிகிறது. சமீபத்தில் முடிந்த டி20 உலக்கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட்டிற்கு பதில் தினேஷ் கார்த்திக்கை முயற்சித்து பார்த்தது பிசிசிஐ. எனவே, டி20க்கான விக்கெட் கீப்பர் பேட்டருக்கான தேவை இன்னும் உள்ளாது. 

எனவே, நீண்ட நாள்களாக ஒரு நிலையான இடத்திற்காக அலைந்துகொண்டிருக்கும் சஞ்சு சாம்சன்தான் அந்த நிரப்பக்கூடிய ஒரே வீரர். இஷான் கிஷன் டி20 டாப் ஆர்டரில் இடம்பெறுவார் என்பதால், டவுண் தி ஆர்டரில் கலக்க சஞ்சு சாம்சன்தான் சரியான ஆளாக இருப்பார். டெத் ஓவர்களில் மிரட்டும்பட்சத்தில், இந்திய அணியின் பினிஷர் பசியும் தீரும் என்றே தெரிகிறது. 

கேஎஸ் பரத் 

அடுத்து டெஸ்ட் போட்டி. டி20, ஒருநாள் தொடர்களில் கூட ரிஷப் பண்டிற்கு ஏற்கெனவே பிரச்சனை இருந்தது. ஆனால், டெஸ்டில் பண்ட் தனிகாட்டு ராஜாவாக திகழ்ந்தார். இங்கு இவரின் இடத்தை நிரப்புவதுதான் பிசிசிஐக்கு முக்கிய தலைவலியாக இருக்கும். 

புது பந்தோ, பழைய பந்தோ, ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறதோ, பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறதோ எதை குறித்தும் அஞ்சாமல் ஆடி ரிஷப் பண்ட் போல் ரன்களை குவிக்கும் மற்றொரு வீரரை தேர்வு எடுப்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.  ஆனால், கே.எஸ். பரத் நல்ல மாற்றாக இருப்பார். முதல் தர போட்டிகளில் தரமான ரெக்கார்டுகளை வைத்துள்ள பரத், வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

25 வயதான ரிஷப் பண்ட் துணை கேப்டன் அளவுக்கு உயர்ந்து, இந்தியாவின் வருங்கால உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனால், அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது என்பது சற்று கடினம்தான். கூடவே, இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் வேளையில், அணி தனது துருப்புச்சீட்டு ரிஷப் பண்டை சற்று நாள்கள் இழந்திருப்பது என்பது சிறு துரதிருஷ்டம்தான். 

மேலும் படிக்க | Rishabh Pant Car Accident: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டன் யார்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News