உத்தரகாசி மீட்புப்பணி: நெருங்கும் மீட்புக் குழு... இன்னும் 5 மீட்டர்தான் - எப்போது நிறைவடையும்?
Uttarakhand Tunnel Rescue: உத்தரகாண்டில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Uttarakhand Tunnel Rescue: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை பணியின்போது, எதிர்பாராத விதமாக நவ.12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, பணி நடந்துகொண்டிருந்த சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இதனால், சில்க்யா பகுதியில் 60 மீட்டர் நீளத்தில் விழுந்த கட்டட இடிபாடுகளால் சுரங்கப்பாதை மொத்தமாக மூடிவிட்டது. இதில் துரிதிருஷ்டவசமாக, கட்டட பணியில் ஈடுபட்ட 41 தொழிலாளர்களும் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 17ஆவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் இருக்கும் 41 பேரும் நலமுடன் இருப்பதாக உறுதிசெய்த நிலையில், அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு மற்றும் ஆக்சிஜன் போன்றவை 6 அங்குள் பைப் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மீட்புப் பணியில் சுரங்க நிபுணரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டு அவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, இந்திய விமானப் படை உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணியில் தொடர்ந்து பல்வேறு தடங்கள்கள் ஏற்பட்டு வந்ததால், உள்ளே சிக்கியவர்கள் மீட்க தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
எலி-துறை சுரங்க நுட்பம்
24 அனுபவமுள்ள எலி-துளை சுரங்க (Rat-Hole Mining) நிபுணர்கள் குழு கைமுறையாக துளையிடும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது மற்றும் சிக்கிய தொழிலாளர்களை நோக்கி ஒரு குறுகிய பாதையை தோண்டி எடுத்து வருகிறது. வல்லுநர்கள் எலி துளை சுரங்க நுட்பத்தை நாடியதால், இடிபாடுகளை அகற்றி, அவர்கள் தப்பிக்கும் வழியை உருவாக்குகின்றனர் எலி-துளைச் சுரங்கம் என்பது பொதுவாக மேகாலயாவில் நடைமுறையில் உள்ள நிலத்தில் துளையிட்டு சிறிய அளவிலான நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையாகும்.
மேலும் படிக்க | ஒரே அடியில் கணவனை கொலை செய்த மனைவி! நாட்டையே உலுக்கிய கொடூரம்! முழுப் பின்னணி!
டெல்லி, ஜான்சி மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த நிபுணர்கள், உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிந்த பகுதியில் கிடைமட்டமாக எலி-துளை சுரங்க நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு டிரெஞ்ச்லெஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நவயுகா இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கையடக்க துளையிடும் இயந்திரங்கள் மற்றும் எரிவாயு கட்டர்களைப் பயன்படுத்தி, அவர்கள் கையால் குறைந்தது 10 முதல் 12 மீட்டர் வரை துளையிட வேண்டும் என்று அங்கு ஒரு அதிகாரி கூறினார்.
உத்தரகாண்ட் அரசின் கூடுதல் செயலாளரும், மீட்பு நடவடிக்கைக்கான மாநில நோடல் அலுவலருமான நீரஜ் கைர்வால் கூறுகையில், "திறமையான பணியாளர்கள் கையால் இடிபாடுகளை அகற்றி, சுரங்கப்பாதை குழாயை (800-மிமீ) படிப்படியாக இடிபாடுகளுக்குள் தள்ளுவார்கள்.
தொழிலாளர்களில் ஒருவரான மோகன் ராய், "பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆக்ஸிஜன் முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிந்து மூன்று குழுக்களாகப் பணியாற்றுவார்கள் என்றார். அவர்களால் 24 மணி நேரத்தில் ஐந்து முதல் ஆறு மீட்டர் இடிபாடுகளை அகற்ற முடியும்" என்றார். மற்றொரு நிபுணர் ராகேஷ் ராஜ்புத், "இந்த முறையைப் பயன்படுத்தி 20 மணி நேரத்தில் 10 மீட்டர் இடிபாடுகளை அகற்ற முடியும்" என்றார். மீட்புக் குழுவில் இருந்து 5 மீட்டர் தொலைவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 24 மணிநேரத்தில் மீட்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சுரங்கப்பாதை சரிந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் எலி துளை சுரங்க நுட்பம் சிக்கிய தொழிலாளர்களை விரைவில் சென்றடைய உதவும் என்று மீட்புக் குழு நம்புகிறது.
மேலும் படிக்க | உத்தரகாண்ட் மீட்புப்பணிகளின் நிலை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ