காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


காதலர் தினத்தையொட்டி காதல் சார்ந்த விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இந்நிலையில், கர்நாடகாவில் 6 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவரான வாட்டாள் நாகராஜ் காதலர் தினத்தை ஒட்டி இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்து அன்பை வெளிபடுத்தி உள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது:-


காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு மாநில அரசு ரூபாய் 50,000 முதல் 1 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



இவர், கர்நாடகா, கன்னட மொழி இரண்டுக்காகவும் பல ஆண்டுகளாகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் வாட்டாள் நாகராஜ். கர்நாடகா சலுவாலி வட்டாள் பக்‌ஷா என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.