வர்தா புயல்: பெங்களூரில் பலத்த மழை!!
சென்னையை தாக்கிய அதிதீவிர வர்தா புயல் வலுகுறையாமல் பெங்களூருவையும் நேற்று பதம் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயலான வர்தா சென்னையில் நேற்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தாக்கியது. புயல் கரையைக் கடந்த போது உச்சகட்டமாக மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பயங்கர காற்றும் வீசியது.
இப்புயல் நேற்று இரவு 7 மணி அளவில் முழுமையாக கரையைக் கடந்தது. ஆனாலும் வலுகுறையாமல் திருவண்ணாமலை வழியாக பெங்களூருவை நோக்கி சென்றது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.