கர்நாடகா மாநிலத்தில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 



 


 


திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 


இந்த எதிர்ப்பையும் மீறி இன்று திப்பு ஜெயந்தி விழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மடிகேரியில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஷ்வரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த போராட்டக்குழுவினர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.  திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.