டெல்லி அரசாங்கம் எடுத்துள்ள ஒரு பெரிய முடிவில், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (VAT) 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejrival) வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“தேசிய தலைநகரில் டீசல் விலை லிட்டருக்கு 8.36 ரூபாய் குறைக்கப்படும். நேற்று வரை 82 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் இப்போது 73.64 ரூபாய்க்கு விற்கப்படும்” என்று கெஜ்ரிவால் கூறினார். 


அதிக டீசல் வீதத்தால் வர்த்தகர்களும் தொழில்களும் பாதிக்கப்படுவதாக அவர்களிடமிருந்து புகார் வந்ததாக முதல்வர் கூறினார்.


"இந்த முடிவு தேசிய தலைநகரில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும்" என்று கெஜ்ரிவால் மேலும் தெரிவித்தார்.


தேசிய தலைநகரின் நிதித் திறனை மீட்டெடுப்பதற்காக, "டெல்லி பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வருமாறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றும், இது தொடர்பாக டெல்லியின் வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் சமூகத்தை சந்திப்பதாகவும் முதல்வர் கேஜ்ரிவால் உறுதியளித்தார்.


டெல்லி அரசாங்கத்தால் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு போர்டல் குறித்த தனது முன்முயற்சி பற்றியும் கெஜ்ரிவால் பேசினார். இந்த போர்டல் டெல்லி அரசாங்கத்தின் இலவச சேவையாகும். வேலை ஆர்வலர்கள் யாருக்கும் பணம் செலுத்தத் தேவையில்லை.


கெஜ்ரிவால் கூறுகையில், மக்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்கள் உள்ளன, வேலை தேடும் நபர்களும் உள்ளனர். ஆனால் இரு தரப்பும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற பொதுவான தளம் இல்லாமல் இருந்தது என்று தெரிவித்தார்.


ALSO READ: வருமான வரி இன்னும் தாக்க செய்யவில்லையா? கவலை வேண்டாம்: விவரம் உள்ளே!!


 “அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில் 7,577 நிறுவனங்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளன. 2,04,750 வேலைகள் இவ்வளவு குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 3,22,850 வேலை தேடுபவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.” என்று புதிய வேலைவாய்ப்புத் தளத்தை பற்றி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.