`மிகவும் மோசமான` நிலையில் டெல்லி காற்று மாசு!
டெல்லியின் மாசு கட்டுப்பாடானது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காணப்பட்டதையடுத்து, இன்று மாசுக்கட்டுபாடனது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் யில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி ரோடு பகுதியின் ஏர் தரநிலை குறியீட்டெண், முக்கிய மாசுபாடுகள் PM 2.5 & PM 10 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.