பிரபல கன்னட நடிகர் மற்றும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் சனி அன்று இரவு மாரடைப்பால் காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தத்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


66-வயது ஆகும் அம்பரீஷ் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். நாகரஹாவு, பங்காரத கள்ள, சீதையல்ல சாவித்ரி, மகதேஸ்வர பூஜாபல, சுபமங்களா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ். ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியின் காதலராக நடித்திருப்பார். 


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆன இவர், 3 முறை லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2006 அக்டோபர் மாதம் முதல் 2008 வரை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர், பின்னர் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அனுதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியினை 2008-ஆம் ஆண்டு துறந்தார்.


நேற்றைய தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.