வயநாடு: கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு இன்று வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கு ஒரு ஒரு விசித்திரமான சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அதாவது ஒரு நபர் அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியான வயநாடு மக்களை சந்திக்க இன்று ராகுல்காந்தி கேரளா சென்றுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆராயவும், மக்களை சந்தித்து பிரச்சனைகளை குறித்து கேட்கவும் வந்துள்ளார்.


இந்த நேரத்தில், அவர் தனது காரின் முன் இருக்கையில் அமர்ந்திபடியே, பொதுமக்களிடம் கை குலுக்கிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஒரு நபர் அவரிடம் கைக்குலுக்கியவுடன், திடிரென ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இது அவருக்கு சிறிது நேரம் சங்கடமாக இருந்தது, ஆனாலும் அவர் தொடர்ந்து மக்களை சந்தித்தார். ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் இந்த நபர் மீண்டும் ராகுலை நெருங்காமல் பார்த்துக்கொண்டனர். 


 



கேரளாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வயநாடு ஒன்றாகும். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் மாநில அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 


வயநாட்டுக்குச் செல்வதற்கு முன், ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் அடுத்த சில நாட்களுக்கு எனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் இருப்பேன். வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிடுவேன், இப்பகுதியில் நடைபெற்று வரும் புனர்வாழ்வுப் பணிகளை பார்வையிடுவேன். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இன்னும் சில பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. "ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லிக்கு திரும்புவேன் என்று தெரிகிறது என கூறியுள்ளார்.