வீடியோ: பீகார் எம்.எல்.ஏ நடன மங்கைகளுடன் ஆட்டம்
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பார் நடன மங்கைகளுடன் குடித்து விட்டு நடனமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி நிதிஷ்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரி தேர்தலின் போது கொடுத்த உறுதி மொழியை தொடர்ந்து வெற்றி பெற்ற பின் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பீகாரில் பூரன மது விலக்கை கொண்டு வந்தார். மாநிலத்தில் தற்போது பூரண மது விலக்கு அமலில் உள்ளது. மது கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையில் விதிக்கலாம் மற்றும் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரையில் அபராதம் விதிக்கலாம் என சட்டம் உள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வினய் வர்மா மதுகுடித்து மற்றவர்களுக்கும் மதுவை கொடுக்கும் வீடியோ காட்சி வெளீயாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கேமராவில் சிக்கிய எம்.எல்.ஏ. வினெய் வர்மாவிற்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ஷியாம் பகதூர் சிங் மது அருந்தி விட்டு பார் நடன மங்கையுடன் நடனம் ஆடிய காட்சி தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இது முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.