வீடியோ; குஜராத்தில் பா.ஜ.க அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியின் கோலாகலம்!!
குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில், குஜராத்தில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசடை தோ்தலில் பா.ஜ.க. அரசு 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள, 182 இடங்களில், 92 இடங்களில் வெற்றி பெற்றால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்பதால், 99 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ., எந்த சிரமமும் இன்றி, தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
தொடரந்து, பா.ஜ., சட்டசபை கட்சி தலைவராக, விஜய் ரூபானி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல், துணைத் தலைவராக, நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று நடைபெறும் விழாவில் விஜய் ரூபானி தலைமையிலான புதிய பா.ஜ.க. அரசு பதவியேற்கவுள்ளது.
மேலும், கடந்த 22ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக விஜய் ரூபானியை முதல்வராக தோ்வு செய்வதாக அறிவித்தனா்.
இந்நிலையில் காந்திநகரின் மாநில தலைமைச் செயலகம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் நரேந்திர மோடி, முன்னிலையில் குஜராத்தில் புதிய அரசு இன்று பதவியேற்கிறது. குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி இன்று பதவியேற்றுக் கொள்ள உள்ளார். ரூபானியுடன், துணை முதல்வராக நிதின் பட்டேலும், 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் தற்போது பிரதமர் மோடி, அவரை தொடர்ந்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.