நீங்க நினைவுகள்; அட்டல் பிஹாரி வாஜ்பாயி-ன் நடன Video!
முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நடன வீடியோ தற்போது இணையதில் பரவி வருகிறது!
முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நடன வீடியோ தற்போது இணையதில் பரவி வருகிறது!
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இவரது உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாக டெல்லி AIIMS அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை துவங்கி வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் சிறுநீர் குழாய் தொற்று காரணமாக காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைந்த வாஜ்பாயி அவர்களை நினைவு கூறும் வகையில் ANI செய்தி நிறுவனம் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவினை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் அவர் புன்சிரிப்புடன் நடனம் ஆடும் காட்சி பார்ப்பவர்கள் மனதை கலங்கச் செய்கிறது!