குஜராத்தில் நடைபெறும் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைதொடர்ந்து, குஜராத் முதல்வர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு போக்குவரத்து நெருக்கடியை காரணமாக கொண்டு பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவருக்கும் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 


இதையடுத்து, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி சபர்மதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக தாரோய் அணைக்கு சென்றடைந்தார். இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானம் இதுவாகும். முதல் முதலாக இயக்கப்பட்ட கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.


இதுகுறித்து முதல்-மந்திரி விஜய் ரூபானி பேசுகையில், 'மோடி கடல் விமானம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் சபர்மதிக்கு வந்தடைவார்' என தெரிவித்தார்.