விமானத்தில் போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர்.  சமீபத்தில் விமானத்தில் பயணிகளுடனும், விமான சிப்பந்திகளுடன் சாத்வி பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்பட்டுள்ளது.


டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் பாஜக எம்.பி சாத்வி பிரக்யாவும் பயணம் செய்துள்ளார். விமானத்தில் தான் முன்பதிவு செய்திருந்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என்றும் விமான ஊழியர்கள் தன் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும் பிரக்யா புகார் அளித்திருந்தார்.


இந்த விமானத்தின் முன்வரிசையில் உள்ள இருக்கையை பிரக்யா முன்பதிவு செய்திருந்துள்ளார். ஆனால், அவர் இருசக்கர நாற்காலியில் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் பதிவு செய்த இருக்கையை விமான ஊழியர்கள் அவருக்கு வழங்க மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக அடுத்த வரிசையில் உள்ள இருக்கையில் அமருமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், இதை ஏற்க மறுத்த பிரக்யா, விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமானம் புறப்பட 45 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது. 


இதனால் எரிச்சலடைந்த சக பயணிகள், பிரக்யாவை இறக்கி விட்டுவிட்டு விமானத்தை எடுக்கும்படி கூறியுள்ளனர். இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது. இறுதியாக ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையிலேயே பிரக்யா பயணம் செய்துள்ளார். 


பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


 



 


இந்த நிகழ்வு தொடர்பாக விளக்கம் அளித்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், “வீல்சேர்களில் மட்டுமே வர முடியும் சூழலில் உள்ள பயணிகள், விமானத்தின் அவசர வழி இருக்கும் இருக்கை அருகே அமர வைக்க வேண்டும் என்பதே விதி. இதன் அடிப்படையிலேயே, சாத்வி பிரக்யா சிங் தாகூரின் இருக்கை மாற்றப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. 


இது குறித்து விளக்கம் அளித்த இதுபற்றிப் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்


நான் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனது முதுகெலும்பில் சிக்கல் உள்ளது மற்றும் கால் இடம் கொண்ட இருக்கை 1A ஒதுக்கப்பட்டது. அதற்காக கூடுதல் கட்டணம் கூட கொடுத்தேன். விமானத்தில் என்னை சக்கர நாற்காலி மூலம் அழைத்து வந்தனர்.


 



 


ஏர் ஹோஸ்டஸ் என்னை அங்கே உட்கார வேண்டாம் என்று சொன்னார், மேலும் 2 பேர் இது ஒரு அவசர இருக்கை என்று சொன்னார்கள். ஆனால் அது அவசர இருக்கை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுதான் விதி என்றால் எனக்கு அந்த விதிமுறை வுத்தகத்தை காட்டும் படி நான் அவர்களிடம் கேட்டேன், ஆனால் அவர்களிடம் விதி புத்தகம் போன்று எதுவும் இல்லை.


 



 


சில பயணிகள் வந்து விமானம் ஏன் தாமதமாகிறது என்று கேட்டார். எனது விஐபி நிலையை நான் காட்டுகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் நான் ஒரு சாதாரண பயணியாக பயணிக்கிறேன். நான் பின்புறத்தில் வலியால் பயணித்தேன், பின்னர் போபால் விமான நிலைய இயக்குநரிடம் புகார் செய்தேன்.


 



இந்த விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்


 



 


இவ்வாறு அவர் தெரிவித்தார்.