விஜய் மல்லையா தற்போது, 2016-முதல் தாம் வாங்கிய வங்கிக் கடனை திரும்ப செலுத்த தாம் முயற்ச்சி செய்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 


இதன் படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், விஜய் மல்லையாவோ, உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நிராகரித்தார். 


இதையடுத்து, வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நேற்று ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். 


இந்நிலையில், தற்போது இன்று அவர் மீண்டும் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,,! 2016-முதல் தாம் வங்கிக் கடனை திரும்ப செலுத்த போராடி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கடனை அடைப்பதற்காக தமது சொத்துக்களை விற்க நீதிமன்றம் அனுமதிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.