ஹரியானா மாநிலத்தில் சிர்சா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்றபோது போலீசார் தாக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசு யோதா என்ற கிராமத்தில் போதைப்பொருள் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் அங்கு சோதனைக்கு சென்றுள்ளனர். அப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயமடைந்தனர்.


அரியானா மாநிலத்தில் போதை மருந்து விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடத்தி, போதைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், போதை மருந்து வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கின்றனர்.



இந்நிலையில், சிர்சா மாவட்டம் தேசு யோதா கிராமத்தில் போதை மருந்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி பதிண்டா போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காவலர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட நபர், தனது காலணியை கழற்றி காவலரை அடித்துள்ளார். இந்த தாக்குதலில் காவலர் தரப்பில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 


போதை மருந்து வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.